யாழ்ப்பாணத்தில் திருவள்ளுவர் - தமிழின் பெருமை! பிரதமர் மோடியின் பயணத்தில் ஒரு மைல்கல் - ஆளுநர் மகிழ்ச்சி! - Seithipunal
Seithipunal


கடந்த 2023 ஆண்டு இலங்கையின் யாழ்ப்பாணத்தில் இந்தியாவின் நிதியுதவியில் அதிநவீன வசதிகளுடன் கட்டப்பட்ட பிரம்மாண்ட கலாசார மையம் திறக்கப்பட்டது.

இந்நிலையில், அந்நாட்டின் சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த இந்த கலாசார மையத்துக்கு திருவள்ளுவரின் பெயா் நேற்று அந்நாட்டு அரசால் சூட்டப்பட்டது.

யாழ்ப்பாணம் கலாசார மையத்துக்கு திருவள்ளுவா் பெயா் சூட்டப்பட்டதை வரவேற்றுள்ள தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவரின் செய்திக்குறிப்பில், "தமிழ் மொழி மற்றும் கலாசாரத்தின் வளர்ச்சியில் அதிக கவனம் செலுத்தி, இந்தியாவின் உதவியுடன் கட்டப்பட்ட யாழ்ப்பாணத்தில் உள்ள புகழ்பெற்ற கலாசார மையத்தை "திருவள்ளுவர் கலாசார மையம்" என்று மறுபெயரிட்டிருப்பது, உலகம் முழுவதும் பழம்பெரும் வாழும் மொழி மற்றும் கலாசாரமான தமிழின் பெருமையைப் பரப்புவதற்கான பிரதமர் நரேந்திர மோடியின் தொடர்ச்சியான பணியில் மற்றொரு மைல்கல்லாகும்.

இது இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் தொன்மையான கலாசாரம் மற்றும் நாகரிக தொடர்பையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது" என்று தமிழக ஆளுநர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Sri Lankan Yazhpanam Thiruvalluvar PM Modi RN Ravi


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->