டிரம்ப் உத்தரவு எதிரொலி ... டாக்டர்களை தேடி படையெடுத்து வரும் தம்பதிகள்! - Seithipunal
Seithipunal


அமெரிக்கா ஜனாதிபதி டிரம்பின் குடியுரிமை காலக்கெடு உத்தரவால் தம்பதிகள் பலரும்மருத்துவ மனைகளுக்கு படையெடுத்து வருகின்றனர். பிப்ரவரி 20-ந்தேதி நாளுக்கு முன்னர் குழந்தைகளை பெற்று கொள்ள கர்ப்பிணிகள் முயன்று வருகின்றனர்.

 கடந்த ஆண்டு நவம்பர் 5-ந் தேதி அமெரிக்காவில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில்  டிரம்ப், பெரும்பான்மைக்கு தேவையான வாக்குகளை விட அதிக வாக்குகளை கைப்பற்றி வெற்றி பெற்று அமெரிக்க ஜனாதிபதியாக தேர்வானார். இதையடுத்து அமெரிக்க அரசியலமைப்பின்படி கடந்த 20-ந்தேதி இரவு 10.30 மணிக்கு அமெரிக்காவின் 47-வது ஜனாதிபதியாக   டிரம்ப் பதவியேற்றார்.

இதன்பின்னர்  டிரம்ப் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து பல உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். அவற்றில், முக்கிய அறிவிப்பாக பிப்ரவரி 20-ந்தேதிக்கு பின்னர் பிறக்கும் குழந்தைகளுக்கு இனி அமெரிக்க குடியுரிமை கிடையாது என்ற உத்தரவும் அடங்கும் .

இந்தநிலையில் டிரம்பின் குடியுரிமை காலக்கெடு உத்தரவால் தம்பதிகள் பலரும் மருத்துவமனைகளுக்கு படையெடுத்து வருகின்றனர். அந்த பிப்ரவரி 20-ந்தேதி நாளுக்கு முன்னர் குழந்தைகளை பெற்று கொள்ள கர்ப்பிணிகள் முயன்று வருகின்றனர்.

இதற்காக, அமெரிக்காவில் வசிக்கும் தம்பதிகள் டாக்டர்களை தொடர்பு கொண்டு அந்த நாளுக்கு முன்பு குழந்தை பிறக்கும் வகையில் சிசேரியன் அறுவை சிகிச்சை மேற்கொள்ளும்படி வலியுறுத்தி வருகின்றனர் என்றும் . பலரும் டாக்டர்களை தொடர்பு கொண்டு முன்பதிவும் செய்து வருகின்றனர் என தகவல் வெளியாகியுள்ளது.

பிப்ரவரி 19-ந்தேதிக்கு பின்னர், அமெரிக்க குடிமக்கள் அல்லாத தம்பதிகளுக்கு பிறக்கும் குழந்தைகள், இயற்கையாகவே அமெரிக்க குடிமக்கள் ஆவது என்பது இனி முடியாது என்ற காரணத்தால் 8 மாதம் மற்றும் 9 மாத கர்ப்பிணியாக இருக்கும் பெண்கள் பலரும் டாக்டர்களை தேடி ஓடுகின்றனர் என்ற தகவலும் வெளிவந்துள்ளது.

மேலும் அமெரிக்க குடியுரிமை அல்லாத பெற்றோரிடம் கிரீன் கார்டு இல்லாவிட்டால், அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கும் அமெரிக்க குடியுரிமை கிடைக்காது என்பதாலும் கிரீன் கார்டு பெறுவதற்காகவும், பலரும் வரிசையில் காத்திருக்கின்றனர்.  டிரம்ப் உத்தரவால் இனி அமெரிக்கா செல்லும் பலருடைய கனவு,நனவாவது கடினம் என்ற சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

 Trump's order echoes Couples in search of doctors


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->