இந்தியாவில் புதிய அணு உலைகள் அமைப்பதற்கு அமெரிக்க நிறுவனத்திற்கு அனுமதி..!
US company given permission to build new nuclear reactors in India
இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே சிவில் அணுசக்தி ஒப்பந்தம் 2007-ஆம் ஆண்டு போடப்பட்டது. இதனை அப்போதைய இந்திய பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் புஷ் ஆகியோரால் கையெழுத்திடப்பட்டது.
தற்போது, இந்த ஒப்பந்தம் தொடர்பான விரிவான பேச்சுவார்த்தைகள், சட்டம் மற்றும் ஒழுங்குமுறை அனுமதிகள், தொழில்நுட்ப அனுமதிகள் பொறுப்பு விதிகள் மற்றும் வரைபடங்கள் தயாரிப்பு ஆகியவற்றை தொடர்ந்து சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான அனுமதி கிடைத்துள்ளது.

குறித்த ஒப்பந்தத்தின் படி, இந்தியாவில் அணு உலைகள் அமைக்க அமெரிக்க திட்டமிட்டுள்ளது. அதன்படி, இந்திய வம்சாவளியை சேர்ந்த கிருஷ்ணா பி.சிங் என்பவருக்கு சொந்தமான ஹோல்டெக் இன்டா்நேஷனல் என்ற அமெரிக்க நிறுவனத்துக்கு அந்நாட்டின் எரிசக்தி துறை அனுமதி வழங்கியுள்ளது.
இதன்படி, இந்தியாவில் உள்ள டாடா கன்சல்டிங் என்ஜினியா்ஸ், லாா்சன் அண்ட் டர்போ மற்றும் ஹோல்டெக் நிறுவனத்தின் பிராந்திய துணை நிறுவனமான ஹோல்டெக் ஏஷியா ஆகிய நிறுவனங்களுக்கு சில நிபந்தனைகளுடன் கூடிய நவீன அணு உலை தொழில்நுட்பத்தைப் பரிமாற்றம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
US company given permission to build new nuclear reactors in India