மீண்டும் தள்ளி போகும் தனுஷின் ராயன் - காரணம் என்ன? - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ் நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் வெளியான படம் 'கேப்டன் மில்லர். இதைத் தொடர்ந்து நடிகர் தனுஷ் தற்போது ராயன் படத்தை இயக்கி நடித்துள்ளார். இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தப் படம் நடிகர் தனுஷுக்கு 50-வது படமாகும். இதில் எஸ்.ஜே.சூர்யா, சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தற்போது படப்பிடிப்பு முடிந்து தொழில்நுட்ப பணிகள் நடந்து வருகின்றன. இதற்கிடையே இந்தப் படம் குறித்த அப்டேட்டும் வெளியாகி வருகிறது. 

ஏற்கனவே இந்த படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஏப்ரல் மாதம் தேர்தல் நடைபெறுவதால், தேர்தல் முடிந்ததும் ஜூன் மாதம் திரைக்கு கொண்டுவர திட்டமிட்டனர். தற்போது மீண்டும் படத்தை தள்ளிவைக்க ஆலோசிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, ஜூன் மாதத்தில் கமல்ஹாசனின் இந்தியன் 2 உள்ளிட்ட சில பெரிய படங்கள் திரைக்கு வருவதால் ரிலீசை தள்ளிவைக்க பேசிவருவதாக தகவல் வெளியாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rayan movie release update


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->