முதலிடம் பிடித்த இந்தியா! வேற லெவல் சாதனை! - Seithipunal
Seithipunal



உலகம் முழுவதும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் இந்தியாவின் யுனிஃபைட் பேமென்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (யுபிஐ) முதலிடம் பிடித்து சாதனை புரிந்துள்ளது.

டிஜிட்டல் இந்தியா முன்னெடுப்பு மூலம் தற்போது நாடு முழுவதும் அனைத்துப் பண பரிவர்த்தனைகளிலும் 40 சதவீதத்துக்கும் அதிகமான பரிமாற்றங்கள் டிஜிட்டல் முறையில் மேற்கொள்ளப்படுகின்றன. 

இந்த யுபிஐ முறையை 30 கோடிக்கும் அதிகமான தனி நபர்களும், 5 கோடிக்கும் அதிகமான தெருவோர வியாபாரிகள், பெரிய வணிக வளாகங்கள் பயன்படுத்துகின்றது.

2016-ல் ஒரு மில்லியனாக இருந்த யுபிஐ பரிவர்த்தனை இப்போது 10 பில்லியன் பரிவர்த்தனைகளை தாண்டியுள்ளது. 

கடந்த 2022-ம் ஆண்டின் தரவுகளின்படி அதிக டிஜிட்டல் பரிவர்த்தனைகளைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. பிரேசில், சீனா, தாய்லாந்து, தென்கொரியா ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.

அண்மையில், பிரான்ஸ், ஐக்கிய அரபு அமீரகம், இலங்கை ஆகிய நாடுகள் இந்தியாவின் யுபிஐ பணப்பரிமாற்ற சேவையில் இணைந்துள்ளன. விரைவில் ஐரோப்பிய நாடுகளும் இந்த சேவையில் இணைய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

India no1 in Digital money transaction


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->