'மீல் மேக்கர் பேப்பர் ரோஸ்ட்' ஒரு முறை இப்படி ட்ரை பண்ணி பாருங்க.! - Seithipunal
Seithipunal


சுவையான மீல்மேக்கர் பேப்பர் ரோஸ்ட் எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். 

தேவையான பொருட்கள்:
மீல்மேக்கர் 
பெரிய வெங்காயம் 
இஞ்சி பூண்டு விழுது 
கொத்தமல்லி, கருவேப்பிலை 
சோம்பு 
கரம் மசாலா
மிளகு தூள் 
உப்பு 
எண்ணெய் 

செய்முறை: 
முதலில் மீல்மேக்கரை சுடுதண்ணீரில் 10 நிமிடம் ஊற வைத்துக் கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சோம்பு சேர்த்து தாளிக்கவும். 

நறுக்கிய பெரிய வெங்காயம், கருவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது, சிறிதளவு உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். 

பிறகு ஊற வைத்துள்ள மீல்மேக்கரை தண்ணீரில்லாமல் பிழிந்து சேர்த்துக் கொள்ளவும். மீல் மேக்கரை நன்றாக வதக்கியவுடன் மிளகுத்தூள், கரம் மசாலா, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேகவைக்கவும். 

இறுதியாக கொத்தமல்லி இலை தூவி இறக்கினால் அவ்வளவுதான் சுவையான மீல்மேக்கர் பேப்பர் ரோஸ்ட் தயார்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mealmaker pepper roast in tamil


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->