அ.தி.மு.க கூட்டணியில் புதிய தமிழகம் கட்சி: தென்காசி தொகுதியில் களமிறங்கும் வாரிசு?
ADMK alliance Tenkasi constituency
வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளதால் அனைத்து அரசியல் கட்சிகளும் தொகுதி பங்கீடு ஒப்பந்தம் மற்றும் வேட்பாளர் அறிவிப்பில் தீவிரமாக உள்ளது.
இதற்கிடையே பல்வேறு அரசியல் கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ள நிலையில் அ.தி.மு.க தனது கூட்டணி கட்சிகளின் வேட்பாளர் பட்டியலை தொடர்ந்து அறிவித்து வருகிறது.
இந்நிலையில் அ.தி.மு.க கூட்டணியில் புதிய தமிழகம் கட்சிக்கு தென்காசி தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் அக்கட்சியின் நிறுவனத் தலைவர் கிருஷ்ணசாமியின் மகன் ஷியாம் கிருஷ்ணசாமி போட்டியிடுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
English Summary
ADMK alliance Tenkasi constituency