பாஜக பிரசார வாகனத்தில் "அதிமுக கொடி".. திடீர் சலசலப்பு.. பதறிப்போன வேட்பாளர்.!! - Seithipunal
Seithipunal


பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் நீலகிரி நாடாளுமன்ற தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் அந்த தொகுதியில் தற்போதைய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். 

சில நாட்களாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்த எல்.முருகன் இன்று உதகையில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலில் பூஜை செய்துவிட்டு தனது பிரச்சாரத்தை தொடங்கினார். 

அப்போது எல்.முருகனின் பிரச்சார வாகனத்தில் கூட்டணி கட்சி கொடிகளோடு அதிமுக கொடியும் இருந்தது அப்போ புதிய பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இதனால் சுதாரித்துக் கொண்ட பாஜக வேட்பாளர் எல்.முருகன் அதிமுக கொடியை அகற்றுமாறு உடனடியாக கூறியதை எடுத்து பிரச்சார வாகனத்தில் இருந்து அகற்றப்பட்டது. 

பாஜக தலைமையிலான கூட்டணியில் இருந்து அதிமுக வெளியே பிறகு பிரதமர் மோடி கலந்து கொண்ட பொதுக்கூட்டத்தில் பாஜகவைச் சேர்ந்த கே பி ராமலிங்கம் ஓ பன்னீர்செல்வத்தை அதிமுக ஒருங்கிணைப்பாளர் எனக் கூறியதற்கு அதிமுக கண்டனம் தெரிவித்திருந்த நிலையில் தற்போது அதிமுக கொடி பயன்படுத்தப்பட்டு இருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AIADMK flag in BJP campaign vehicle in Nilgiri


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->