அமைச்சரை தாக்க முயன்ற திமுக நிர்வாகிகள்.. நெல்லையில் கைகலப்பு.!! - Seithipunal
Seithipunal


திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் களமிறங்க 40-க்கும் மேற்பட்டோர் விருப்ப மனு அளித்த நிலையில் திமுகவின் முக்கியப் புள்ளிகள் பலரும் போட்டியிட முயன்றதால் நெல்லை தொகுதி கூட்டணி கட்சியான காங்கிரஸ்க்கு ஒதுக்கப்பட்டது. திமுகவில் நடந்த போட்டி போன்ற காங்கிரஸ் தரப்பிலும் பலரும் சீட் கேட்டு மல்லுக்கட்டியதால் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ராபர்ட் புரூஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். 

இதனால் சொந்த மாவட்டத்தைச் சேர்ந்த நிர்வாகிக்கு வாய்ப்பு வழங்காமல் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த நபர் நிலையில் போட்டியிடுவதால் திமுக, காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் அதிருப்தியில் இருந்து வந்தனர்.‌ இதற்கிடையே தமிழ்நாடு அரசு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், நெல்லை மக்களவைத் தொகுதிக்குட்பட்ட மீனவர் கிராமங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

 

இந்நிலையில் நேற்று நெல்லை தொகுதிக்கு உட்பட்ட திசையன்விளையில் திமுக நகரச் செயலாளர் ஜான்கென்னடி தலைமையில் தேர்தல் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மாவட்ட ஊராட்சித் தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் தலைமையில் தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுவதாக அறிவித்தார்.

அப்போதே ஜான்கென்னடி உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்து மாவட்டச் செயலாளர்தான் பொறுப்புக் குழுவை நியமிக்க வேண்டும் என்று கோஷம் எழுப்பியதால் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்டது. அப்போது அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை சிலர் தாக்க முயன்ற தால் போலீஸ் பாதுகாப்புடன் அமைச்சர் காரில் ஏறி புறப்பட்டு சென்றார்.

இந்த சம்பவம் அரசியல் களத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி திருநெல்வேலி மாவட்ட பொறுப்பு அமைச்சர் தங்கம் தென்னரசு, சென்னையிலிருந்து திருநெல்வேலிக்கு வந்து இருதரப்பு திமுக நிர்வாகிகளை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK cadres tying to attack on minister anitha radhakrishnan


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->