சிறுபான்மையினர் வாக்கு சதவீதத்தை தக்கவைக்க காங்கிரஸ் என்ன வேண்டுமானாலும் செய்யும் - மத்திய அமைச்சர் அமித்ஷா குற்றசாட்டு.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் மக்களவை தேர்தலுக்கான இரண்டாம்கட்ட வாக்குப்பதிவு நாளை 26ம் தேதி நடைபெற உள்ளது. நேற்று மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவடைந்தது. நேற்று அனைத்து கட்சி தலைவர்களும் அனைத்து கட்சி வேட்பாளர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தனர்.

அந்த வகையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தீவிர பிரச்சாரத்தில ஈடுபட்டார். பிரச்சாரக் கூட்டத்தில் அமித்ஷா பேசுகையில், இடதுசாரிகள் மற்றும் காங்கிரஸ் கூட்டணி கேரளாவில் மாறி மாறி ஆட்சி செய்து வருகிறது. மக்களவைத் தேர்தலில் ஆதாயம் பெறுவதற்காக தடைசெய்யப்பட்ட அமைப்பைகளுடன் கூட்டணி வைத்துள்ளது. சிறுபான்மையினர் வாக்கு வங்கியை தக்கவைக்க அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்.

பயங்கரவாத அமைப்புகளிடம் இருந்து நாட்டை பாதுகாப்பதற்காக பிரதமர் மோடி தீவிரமாக பணியாற்றி வருகிறார். பிரதமர் மோடி ஆட்சி இந்தியாவில் இருக்கும் வரை பயங்கரவாத அமைப்பின் மீதான தடை நீக்கப்படாது என்றார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Minority community vote Bank Congress


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->