20 நாட்களாக எனது செல்போன் உரையாடல் ஒட்டு கேட்கப்படுகிறது - ஹேச். ராஜா பரபரப்பு பேட்டி.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் மக்களவை தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்கு பதிவு நாளை 26ம் தேதி நடைபெற உள்ளது. நேற்று மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவடைந்தது. நேற்று அனைத்து கட்சி தலைவர்களும் அனைத்து கட்சி வேட்பாளர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், சிவகங்கையில் தனியார் மஹாலில் பாஜகவின் முன்னாள் தேசிய செயலாளர் ஹெச். ராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய ஹெச். ராஜா,”காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையில் சிறுபான்மையினை கவர்வதற்காக, பெரும்பான்மையினரை வஞ்சிக்கும் விதமாக, தனது தேர்தல் சித்து விளையாட்டை தேர்தல் அறிக்கையில் வெளியிட்டுள்ளனர். 

மதத்தின் அடிப்படையில் இஸ்லாமியர்களை இணைக்கவும், ஜாதி அடிப்படையில் இந்துக்களை பிரித்து ஆட்சிக்கு வர காங்கிரஸ் முயற்சி செய்கிறது. செல்போன் உரையாடல்கள் ஒட்டு கேட்கப்படுவதாக கூறப்படும் குற்றச்சாட்டில் உண்மை உள்ளது. 20 நாட்களாக எனது செல்போன் உரையாடல்கள் ஒட்டு கேட்கப்படுகிறது. அதனால் செல்போனில் அதிகம் உரையாடுவது கிடையாது என்று கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Phone call hacked raja speech


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->