வேலூர் தொகுதியில் "9 சண்முகங்கள்" போட்டி.!! - அதிர்ச்சியில் ஏ.சி சண்முகம்.!! - Seithipunal
Seithipunal


மக்களவைப் பொதுத் தேர்தலில் தமிழ்நாட்டில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடுகிறார். அவர் சுயேட்சையாக போட்டிடும் நிலையில் அவரை எதிர்த்து 5 பன்னீர் செல்வங்கள் போட்டியிடுகின்றனர்.

இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாக மாறிய நிலையில் தற்போது வேலூரில் 9 சண்முகங்கள் போட்டியிடுவது பாஜக வேட்பாளர் ஏ.சி‌ சண்முகத்திற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

வேலூரில் 10 சண்முகம் போட்டி:

வேலூர் மக்களவைத் தொகுதியை பொருத்தவரை மொத்தம் 50 வேட்ப அணுக்கள் பெறப்பட்ட நிலையில் அவற்றில் 37 பேருக்கு மனக்கல் ஏற்கப்பட்டது. அவற்றில் முக்கிய வேட்பாளராக அதிமுகவின் மருத்துவர் பசுபதி, திமுகவின் கதிர் ஆனந்த், பாஜகவின் ஏ.சி சண்முகம், நாம் தமிழர் கட்சியின் மகேஷ் ஆனந்த் ஆகியோர் மனுக்கள் ஏற்கப்பட்டன.

இந்த நிலையில் பாஜக வேட்பாளர் ஏசி சண்முகம் போன்று சண்முகம், சண்முகவேலு, சண்முகசுந்தரம் என்ற பெயரில் மொத்தம் 10 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருப்பது அரசியல் வட்டாரத்தில்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சண்முகம் லிஸ்ட் : 

1) பாஜக சார்பில் போட்டியிடும் ஏசி சண்முகம்.

2) சத்துவாச்சாரியைச் சேர்ந்த சண்முகவேலு.

3) வாணியம்பாடி அம்பலூர் கிராமத்தைச் சேர்ந்த ஏ.சி சண்முகம்.

4) சேலம் மாவட்டம் ஓமலூர் சேர்ந்த ஜி.சண்முகம்.

5) வாணியம்பாடியைச் சேர்ந்த பி.சண்முகம்.

6) வேலூர் மாவட்டம் திருவலத்தைச் சேர்ந்த சண்முகசுந்தரம்.

7) வேலூர் மாவட்டம் சலவன் பேட்டையைச் சேர்ந்த கே.சண்முகம்.

8) வேலூர் மாவட்டம் விருப்பாச்சி புரத்தை சேர்ந்த ஜி.சண்முகம்.

9) வாணியம்பாடி புதூர் கிராமத்தைச் சேர்ந்த எம்பி சண்முகம்.

10) வேலூர் சத்துவாச்சாரியைச் சேர்ந்த திமுக கவுன்சிலர் சண்முகசுந்தரம் ஆகியோர் வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

9 shanmugam contest against ACshanmugam in Vellore


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->