கள்ளக்குறிச்சியில் பரபரப்பு.. அதிமுக நிர்வாகி கொலை செய்ய திமுக ஆதரவாளர்கள் முயற்சி.!! - Seithipunal
Seithipunal


கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள செங்குறிச்சி ஊராட்சி மன்றத்தின் துணைத் தலைவராக இருப்பவர் திமுகவை சேர்ந்த அண்ணாமலை. இவர் சட்டவிரோதமாக லாரி மற்றும் பொக்லைன் இயந்திரம் மூலம் அனுமதி இன்றி அந்த கிராமத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரியிலிருந்து இரவு பகல் பாராமல் மணல் அள்ளி விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது. 

அந்த ஏரியில் அளவுக்கு அதிகமாக மண் எடுத்ததால் அதிக அளவு பள்ளம் ஏற்பட்டு அந்த நீரில் குளிப்பதற்காக செல்லும் மாணவர்கள் மூழ்கி உயிரிழந்து வருவது தொடர் வாடிக்கையாகி வருகிறது என அந்த கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். 

குறிப்பாக இரண்டு மாணவர்கள் ஏரியில் மூழ்கி உயிரிழந்ததால் ஏரியில் மணல் அள்ளக் கூடாது என அந்த கிராம மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். இருப்பினும் துணைத் தலைவராக இருக்கும் அண்ணாமலை மீண்டும் மணல் எடுத்து லாரிகள் மூலம் விற்பனை செய்து வருவதாக நேற்று மாலை கிடைத்த தகவலின் பெயரில் அதிமுக முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ஜெயக்குமார் தடுத்து நிறுத்தி கேள்வி கேட்டுள்ளார்.

அப்போது திமுக நிர்வாகி அண்ணாமலையின் ஆதரவாளர்கள் ஜெயக்குமார் மீது லாரி ஏசி கொலை செய்ய முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. இதில் நல்வாய்ப்பாக உயிர் பிழைத்த ஜெயக்குமார் கை மற்றும் கால்களில் காயம் ஏற்பட்ட நிலையில் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

இது தொடர்பாக அதிமுக நிர்வாகி ஜெயக்குமார் உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்ததோடு அண்ணாமலையை உடனடியாக கைது செய்ய வேண்டும் என செங்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் உடன் உளுந்தூர்பேட்டை காவல் நிலையம் முன்பு கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். 

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்ததை எடுத்து அங்கிருந்து கலைந்து சென்றனர். மண்ணல் கடத்தலை தடுக்க முயன்ற முன்னாள் அதிமுக கவுன்சிலர் மீது திமுக துணைத்தலைவரின் ஆதரவாளர்கள் லாரியேற்றி கொலை செய்ய முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Attempt murder on former ADMK councilor in kallakurichi


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->