திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை - காரணம் என்ன? - Seithipunal
Seithipunal


திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் உள்ள மாரியம்மன் கோயிலின் சித்திரை பெருந்திருவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. மூலவர் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டதை தொடர்ந்து, ஏப்ரல் 15ஆம் தேதி வெள்ளிக் குதிரை வாகனத்தில் சாமி வலம் வருவார்.

இந்தத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் ஏப்ரல் 16ஆம் தேதி நடைபெறவுள்ளது. அன்றைய தினம் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஏப்ரல் 17ஆம் தேதி வெள்ளி காமதேனு வாகனத்திலும், ஏப்ரல் 18ஆம் தேதி முத்து பல்லாக்கும், ஏப்ரல் 19ஆம் தேதி தெப்ப உச்சமும் நடைபெறும். 

ஏப்ரல் 23ஆம் தேதி தங்க கமல வாகனத்தில் திரு வீதி உலா நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வை காண ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கூட்டம் வருதால் அங்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்தக் கோவில் திருவிழா வரும் 16ஆம் தேதி நடைபெறவுள்ளதால், அன்றைய தினம் திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக ஜூன் எட்டாம் ஆம் தேதி வேலை நாளாக இருக்கும் என்று மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

coming 16th local holiday in trichy


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->