ஊழலற்ற ஆட்சி அமைய... இதைத்தான் செய்ய வேண்டும் - அண்ணாமலை கருத்து! - Seithipunal
Seithipunal


பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை கள்ளக்குறிச்சி, சங்கராபுரம் பகுதியில் 'என் மண் என் மக்கள்' என்ற பாதயாத்திரை நடத்தி வருகிறார். 

அப்போது அவர் பேசியிருப்பதாவது, சங்கராபுரம் தொகுதியின் வளர்ச்சி பின் தங்கியுள்ளது. தமிழகத்தில் ஏழை எளிய மக்களுக்கு தரமான கல்வி இல்லை. பணம் உள்ளவர்களுக்கு மட்டுமே தரமான கல்வி கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 

கல்வராயன் மலை, வெள்ளி மலையில் உள்ள மலைவாழ் மக்களில் மட்டும் பள்ளியில் படித்த 15 பேர் இந்த ஆண்டு ஐஐடியில் சேர்ந்துள்ளனர். 

சங்கராபுரத்தில் பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்குச் செல்லும் வழியில் இரண்டு டாஸ்மாக் மது கடைகள் உள்ளது. இதனால் பெண் பிள்ளைகள் பள்ளிக்கு எப்படி பாதுகாப்பாக சென்று வர முடியும். 

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பிறகு 1.50 லட்சம் வீடுகள், 1.75 லட்சம் கழிவறைகள், 1 லட்சத்து 24 ஆயிரம் குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டுக்கு முன்பு 5 மருத்துவ கல்லூரிகள் மட்டுமே இருந்த நிலையில் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு 15 மருத்துவ கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் மீண்டும் ஊழலற்ற ஆட்சி அமைய மூன்றாவது முறையாக நீங்கள் மோடியின் கரத்தை வலுப்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

corruption free government Annamalai opinion


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->