தேர்தல் நேரத்தில்... சென்னையில் இறங்கிய ED.. தலைநகரில் அதிரடி சோதனை.!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் 39 மக்களவைத் தொகுதிகளுக்கான வாக்கு பதிவு ஆடை நடைபெற உள்ள நிலையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவன ஊழியர் தர்ஷன் குமார் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோன்று அசோக் நகரில் உள்ள ஆடிட்டர் அலுவலகத்திலும் அமலாக்கத்துறை சோதனையானது நடைபெற்று வருகிறது.

சட்டவிரோத பண பரிமாற்றம் நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பெயரில் இந்த சோதனையானது நடைபெற்று வருவதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. இன்று காலை ஏழு மணி முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்னையின் ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை செய்து வருகின்றனர். குறிப்பாக ஆடிட்டர்கள் மற்றும் தனியார் மென்பொருள் நிறுவன ஊழியர்கள் மற்றும் அதிபர்கள் தொடர்புடைய இடங்களில் சோதனையானது நடைபெற்று வருகிறது. 

 

குறிப்பாக சென்னை நுங்கம்பாக்கம் புஷ்பா நகரில் வசித்து வரும் முபாரக் உசேன் என்பவர் வீட்டிலும், அவரது ஆடிட்டிங் நிறுவனத்திலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் சட்டவிரோத பண பரிவர்த்தனையில் ஈடுபட்டுள்ளதாக கிடைத்த தகவலின் பெயரில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சோதனையின் பின்புலத்தில் ஏதேனும் அரசியல் கட்சிக்கு தொடர்பு இருக்கிறதா என்பது அமலாக்கத்துறை சோதனைக்கு பின் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Edraid on it company staff and auditor houses


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->