பல லட்சம் மதிப்புடைய பட்டாசுகள் பறிமுதல்: கூண்டோடு தூக்கிய போலீசார்! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் பட்டாசு தயாரிக்கும் குடோன்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்படும் வெடி விபத்தில் பலர் உயிரிழந்தனர்.

இதனை அடுத்து தமிழகம் முழுவதும் பட்டாசு தயாரிக்கும் இடங்களில் பாதுகாப்பு தொடர்பாக போலீசார் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். 

அதன்படி திருவாரூர், வலங்கைமான் பகுதியில் உள்ள பட்டாசு கடை மற்றும் குடோன்களில் மாவட்ட போலீசார் ஆய்வு மேற்கொண்டனர். 

அதே பகுதியில் உள்ள 12 நாட்டு வெடிகள் உற்பத்தி கடைகள் மற்றும் தீபாவளிக்காக தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள 48 பட்டாசு கடைகள் உள்பட 30க்கும் மேற்பட்ட இடங்களில் அரசு அனுமதிக்கப்பட்டு சட்ட விதிகளின்படி உரிய ஆவணங்களுடன் வெளி மருந்துகள் பயன்படுத்தப்படுகிறதா என போலீசார் ஆய்வு மேற்கொண்டனர். 

சோதனையில் விதிகளை மீறி பல லட்சம் மதிப்பிலான வெடிப்பொருட்கள் மற்றும் பட்டாசுகள் இருப்பு வைத்திருந்தது தெரிய வந்தது. இதனால் போலீசார் அனைத்தையும்  பறிமுதல் செய்தனர். 

மேலும் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிக அளவில் வெடிப்பொருள்கள் வைத்திருந்ததற்காக போலீசார் 9 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

explosives fire crackers lakhs worth several seized police


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->