நள்ளிரவில் வெடித்து சிதறிய பட்டாசுகள் - வலங்கைமானில் பரபரப்பு.!  - Seithipunal
Seithipunal


திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வலங்கைமான் பகுதியில் நாற்பத்து எட்டு பட்டாசு கடைகளும், பன்னிரெண்டு பட்டாசு உற்பத்தி ஆலைகளும் இயங்கி வருகின்றன. அதனால் இங்கு, திருவாரூர் மட்டுமில்லாமல் அதன் அருகிலுள்ள மாவட்டங்களில் இருந்தும் பட்டாசு வாங்குவதற்காக வாடிக்கையாளர்கள் வந்து செல்கின்றனர். 

இந்த நிலையில், வலங்கைமானில் இருந்து குடவாசல் செல்லும் சாலையில் அமைந்துள்ள செந்தில்குமார் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு கடையில், நேற்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

இந்தக் கடையின் பின்புறம் பட்டாசுகளை இருப்பு வைத்திருந்த பகுதியில் பட்டாசுகள் வெடித்துச் சிதறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக தகவலறிந்து வந்த வலங்கைமான் மற்றும் குடவாசல் தீயணைப்புத்துறையினர் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

இந்த தீ விபத்தில் சுமார் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் வெடித்துச் சிதறியது. நல்வாய்ப்பாக இந்த தீ விபத்தின் போது கடையில் யாரும் இல்லாததால் யாருக்கும் இந்தக் காயமும் ஏற்படவில்லை. இது தொடர்பாக வலங்கைமான் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

fire accident in valangaimaan firecrackers shop


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->