7 கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை: காரணம் என்ன? - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அப்போது தெரிவித்திருப்பதாவது, 

கன்னியாகுமரி அருகே உள்ள அகதீஸ்வரன் விவேகானந்தா கல்லூரியில் மைதானத்தில் இன்று நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பு பேச உள்ளார். 

எனவே பாதுகாப்பு கருதி திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், மதுரை, திண்டுக்கல், தேனி போன்ற மாவட்டங்களில் இருந்து 20 ஆயிரம் போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளனர். 

இது தவிர கன்னியாகுமரி மாவட்ட போலீசார் 1200 பேர் பாதுகாப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும் பிரதமர் மோடி வருவதையொட்டி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. 

பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தில் 150 க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, ட்ரோன்கள் பறக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 

கன்னியாகுமரி, விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு படகு போக்குவரத்து மதியம் 2 மணி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. பொதுக்கூட்டம் நடைபெறும் மைதானம், ஹெலிகாப்டர் இறங்கும் தளம், கன்னியாகுமரி கடற்கரை போன்ற பகுதிகளில் உள்ள கடைகள் திறக்கவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 

மேலும் கன்னியாகுமரி கடல் பகுதிகளில் இன்று மதியம் 2 மணி வரை மீனவர்கள் மீன்பிடிப்பதற்காக கடலுக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. 

இந்த உத்தரவை மத்திய கடலோர பாதுகாப்பு குழுமம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கன்னியாகுமரி, சிலுவை நகர், கோவளம் உள்ளிட்ட 7 கடற்கரை கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் இன்று கடலுக்குள் சென்று மீன் பிடிக்க கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Fishermen  banned from going sea


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->