திருவாரூரில் அதிர்ச்சி - கிரிப்டோ கரன்சியில் முதலீடு - 300 பேரனுக்கு பட்டையடித்த கும்பல்.! - Seithipunal
Seithipunal


திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பூதமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர்கள் நூர் இஸ்லாம், அகமது கபீர், நஸ்ருதீன், நஸ்ருல்லா மற்றும் ஜெயினுதின். இவர்கள் ஐந்து பேரும் பூதமங்கலம், லட்சுமாங்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த 300 பேரிடம் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் பெரும் லாபம் சம்பாதிக்கலாம் என்று ஆசைவார்த்தை கூறியுள்ளனர். 

இதனை உண்மை என்று நம்பி ஏராளமானோர் 10 ஆயிரம் ரூபாய் முதல் 5 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்துள்ளனர். இவர்கள் ஐந்து பெரும் கும்பகோணத்தை தலைமை இடமாகக் கொண்டு அலுவலகம் இயங்குவதாக கூறி, லட்சுமாங்குடியில் ஒரு கிளை அலுவலகத்தையும் திறந்து வைத்துள்ளனர். 

இந்த நிலையில், அந்த கிளை அலுவலகம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மூடப்பட்டுவிட்டது. இதனால், பொதுமக்கள் பணம் வசூல் செய்த ஐந்து பேரையும் தொடர்புகொண்டு பணத்தைத் திருப்பி தரும்படி கேட்டுள்ளனர்.

அதற்கு அவர்கள் சரியான பதில் தெரிவிக்காமல் இருந்துள்ளனர். இதனால் சந்தேகமடைந்த பொதுமக்கள் அவர்கள் ஐந்து பேர் குறித்து விசாரித்த போது, கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்யாமல் மோசடி செய்தது தெரியவந்தது.

இது தொடர்பாக சுமார் 120 க்கும் மேற்பட்டோர் திருவாரூர் எஸ்.பி அலுவலகத்திற்கு நேரில் சென்று புகார் அளித்தனர். திருவாரூர் மாவட்டத்தில் நடந்த இந்த மோசடி சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

five peoples money fraud to three hundrad peoples in tiruvarur


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->