பதற வைக்கும் பன்றி காய்ச்சல் - திருவாரூரில் 4 பேர் அனுமதி.! - Seithipunal
Seithipunal


திருவாரூர் மாவட்டம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் திருவாரூர், நாகப்பட்டினம், காரைக்கால் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் தினமும் வெளி நோயாளிகளாக சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

இந்த நிலையில், கடந்த சில நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வரும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்ற நிலையில், தற்போது 35 பேர் காய்ச்சல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் நான்கு பேருக்கு பன்றிக்காய்ச்சல் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் ஜோசப் ராஜ் பேசியதாவது, "பன்றிக்காய்ச்சலால் சிகிச்சை பெற்று வரும் நான்கு பேருக்கும் எந்தவித ஆபத்தும் இல்லை. 
அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு தேவையான மருந்துகள் போதிய அளவில் உள்ளன. 

ஆகவே நோயாளிகள் எவ்வித அச்சமும் கொள்ள தேவையில்லை. காய்ச்சல் அறிகுறிகள் இருப்பவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று உடனடியாக சிகிச்சை பெற வேண்டும்" என்றுத் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

four peoples affected swineflu fever in tiruvarur


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->