அரசு பேருந்து டிக்கெட்டை திருடி விற்ற கண்டக்டர்.!! - Seithipunal
Seithipunal


கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் சில மாதங்களுக்கு முன்பு தணிக்கை நடைபெற்றது. அந்த தணிக்கையின் போது பேருந்து பயணம் சீட்டுகள் திருடு போனது தெரிய வந்தது. இதனை அடுத்து திருடு போன டிக்கெட்டுகளின் எண்கள் வைத்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த அக்டோபர் 7ம் தேதி விழுப்புரத்தில் அரசு பேருந்தில் பயணிகளிடம் பரிசோதகர்கள் பயணச்சீட்டை சோதனை செய்தது தெரியவந்ததை அடுத்து அந்த பேருந்தின் நடத்துநர் தமிழரசனிடம் கள்ளக்குறிச்சி பணிமனை மேலாளர் முருகன் நடத்துனர் தமிழரசனிடம் விசாரணை மேற்கொண்டார்.

அந்த விசாரணையில் பயண சீட்டுகள் திருடியதை ஒப்புக்கொண்டார் தமிழரசன். சுமார் 9 லட்சத்து 250 ரூபாய் மதிப்பிலான பயண சீட்டுகளை திருடி பயணிகளிடம் விற்றுள்ளார். இது தொடர்பாக பணிமனை மேலாளர் முருகன் அளித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து தமிழரசனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அரசு பேருந்து நடத்துநர் டிக்கெட் திருடி பயணிகளிடம் பெற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

govt bus conductor stole ticket and sold it


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->