வாக்களிக்க போறீங்களா? இந்த ஆவணங்கள் கட்டாயம்.. முழு லிஸ்ட் இதோ.!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நாளை ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. பொதுமக்கள் தங்களின் ஜனநாயக கடமையை நாளை ஆற்ற உள்ள நிலையில் வாக்களிக்க செல்பவர்கள் எடுத்துச் செல்ல வேண்டிய ஆவணங்கள் என்ன என்பதை இப்போது பார்க்கலாம். 

வாக்காளர்கள் தங்கள் அடையாளத்திற்காக வாக்காளர் அடையாள அட்டையை கட்டாயம் காண்பிக்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 

அவ்வாறு வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தும் வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் ஆதார் அட்டை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டப்பணி அடையாள அட்டை, அஞ்சலக கணக்கு புத்தகம், புகைப்படத்துடன் கூடிய வங்கி புத்தகம், தொழிலாளர் நல அமைச்சக மருத்துவ காப்பீடு அட்டை, ஓட்டுநர் உரிமம், வருமானவரித்துறை நிரந்தர எண் அட்டை ஆகியவற்றை ஆவணங்களாக சமர்ப்பிக்கலாம் 

மேலும் தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் கீழ் இந்திய தலைமை பதிவாளர் வழங்கப்பட்ட ஸ்மார்ட் அட்டை, இந்திய பாஸ்போர்ட், புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம், மத்திய, மாநில பொது நிறுவனங்களில் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பணி அடையாள அட்டை, மக்களவை மற்றும் சட்டசபை மேலவை உறுப்பினர்களான அடையாள அட்டை, மத்திய அரசின் சமூக நீதிமன்றம் அதிகாரம் அளித்தல் அமைச்சகத்தால் வழங்கப்பட்ட அடையாள அட்டை உள்ளிட்டவற்றை பயன்படுத்தி வாக்களிக்கலாம். வாக்காளர்கள் பட்டியலில் வாக்காளர் வரிசை எண் அறிந்து கொள்வதற்காக வழங்கப்பட்டுள்ள பூத் ஸ்லீப் அடையாள ஆவணமாக ஏற்கப்படாது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

List of Documents Required for Voting


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->