பிட் பேப்பரை ஸ்டோரி போட்ட பிளஸ் 2 மாணவர் - வேலூரில் அதிர்ச்சி சம்பவம்.! - Seithipunal
Seithipunal


வேலூரில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர் ஒருவர் கடந்த மார்ச் 11 மற்றும் 15 ஆம் தேதிகளில் நடைபெற்ற கணக்குப் பதிவியல், பொருளியல் பாடங்களுக்கு தான் "பிட்" எடுத்துச் சென்றதாக கூறி, அதனை பள்ளி வளாகத்தில் இருந்தே போட்டோ மற்றும் வீடியோ எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரிகளாக பதிவிட்டுள்ளார்.

அதில், ஒவ்வொரு ஃபோட்டோவுக்கும் ஒரு பாடல் என்று ஓடவிட்டு, பின்னனியில் தனுஷ் நடித்த வி.ஐ.பி படத்தின் ‘வாட் எ கருவாடு’ பாடல், பொல்லாதவன் படத்தின் ‘படிச்சுபார்த்தேன்’ பாடல் போன்றவற்றை வைத்துள்ளனர். கூடவே நண்பர்களுடன் எடுத்த புகைப்படங்களும் பகிரப்பட்டுள்ளது.

தற்போது இந்த ஸ்டோரிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இந்த சம்பவம் குறித்து வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் விசாரித்தபோது, “இந்த வீடியோவின் உண்மைத்தன்மை குறித்து விசாரித்து வருகிறோம். விசாரணைக்குப் பின் தெரிவிக்கிறோம்” என்று தெரிவித்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

plus to student story post exam bit paper in vellore


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->