நள்ளிரவில் ஒலித்த ஏ.டி.எம்.எச்சரிக்கை மணி: விரைந்த போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி! - Seithipunal
Seithipunal


திருப்பத்தூர் ரயில் நிலைய சாலையில் செயல்பட்டு வரும் தனியார் வங்கி ஏ.டி.எம் மையத்தில் பொதுமக்கள் அடிக்கடி பணம் எடுப்பதோடு மட்டுமல்லாமல் டெபாசிட் செய்கின்றனர். 

இந்நிலையில் வேலூர், காட்பாடி அடுத்துள்ள சோமலாபுரம் கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல் (வயது 24) நேற்று நள்ளிரவு காட்பாடியில் இருந்து ரயில் மூலம் திருப்பத்தூருக்கு வந்துள்ளார். 

பின்னர் அங்கிருந்த ஏ.டி.எம் மையத்திற்குள் புகுந்து கண்காணிப்பு கேமராக்களை அடித்து நொறுக்கிவிட்டு ஏடிஎம் எந்திரத்தை உடைத்து பணம் திருடியுள்ளார். 

அப்போது ஹைதராபாத்தில் உள்ள வங்கியின் தலைமை அலுவலகத்திற்கு எச்சரிக்கை மணி ஒலித்ததை தொடர்ந்து வங்கியின் அதிகாரிகள் உடனடியாக திருப்பத்தூர் மாவட்ட போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். 

தகவலின் பெயரில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் உடனடியாக ஏடிஎம் மையத்திற்கு சென்று பார்த்த போது ஏடிஎம் எந்திரத்தை உடைத்து சக்திவேல் பணம் திருடி கொண்டிருந்தார். 

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் சக்திவேலை மடக்கி பிடித்து கைது செய்தனர். நள்ளிரவு நேரத்தில் வாலிபர் ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்து பணம் திருடிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tirupattur near bank atm robbery


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->