கொட்டும் மழையில் அமர்ந்து போராட்டம் நடத்தும் துப்புரவுத் தொழிலாளர்கள்! காரணம் என்ன? - Seithipunal
Seithipunal


திருவாரூர், மன்னார்குடி நகராட்சியில் பணியாற்றும் ஒப்பந்த துப்புரவு தொழிலாளர்கள், தீபாவளி பண்டிகை போனஸ் கேட்டும் முதல் வாரத்தில் ஊதியம் வழங்க வேண்டும் எனவும் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு கொட்டும் மழையில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

மேலும் துப்புரவு தொழிலாளர்கள், பிரதி மாதம் 5ஆம் தேதி ஏற்கனவே செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஊதியம் வழங்க வேண்டும். தீபாவளி பண்டிகைக்காக முன்பணம் ரூ. 5000 வழங்க வேண்டும். 

ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு ஒவ்வொரு மாதமும் இஎஸ்ஐ,  ஈபிஎஃப் விபத்து காப்பீட்டு சந்தா தொகை செலுத்தி அதன் விவரங்களை ஒப்பந்ததாரர் தூய்மை பணியாளர்களிடம் வழங்கிட வேண்டும். 

மாவட்ட ஆட்சியர் அலுவலக அறிவுறுத்தலின்படி ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு நாள் ஊதியம் ரூ. 652 வழங்க வேண்டும். சீருடை, கையுறை, காலுறை, மழை கோட்டு, சோப்பு போன்றவை உரிய காலத்தில் வழங்க வேண்டும் உள்ளிட கோரிக்கைகளை முன்வைத்து தமிழக ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் சங்கத்தின் மன்னார்குடி நகராட்சி தலைவர் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. 

இதில் நகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் சங்கத்தின் தலைவர் உள்பட 50க்கும் மேற்பட்டோர் கொட்டும் மழையிலும் நகராட்சி அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். 

இதனை அடுத்து மன்னார்குடி நகராட்சி ஆணையர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் பிரதிநிதிகளை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tiruvarur Cleaning workers protesting 


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->