மின் இணைப்பு துண்டிக்கப்படும்! மக்களே உஷார் - எச்சரிக்கும் தமிழக மின் வாரியம்! - Seithipunal
Seithipunal


மின் கட்டணம் கட்டாததால் உங்கள் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்று, எஸ்எம்எஸ் (குறுஞ்செய்தி) வந்தால், பொதுமக்கள் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்று தமிழக மின் வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

குறுஞ்செய்தி மூலம் "நீங்கள் மின் கட்டணம் கட்டவில்லை, உங்கள் மின் இணைப்புத் துண்டிக்கப்படும்" என்று கூறி மக்களிடையே மோசடி செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், மின் வாரியம் இந்த விழிப்புணர்வு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.

அதில், உங்கள் செல்போனுக்கு மின் கட்டணம் கட்டாததால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என குறுஞ்செய்தி வந்தால் பதட்டம் அடைய வேண்டாம்.

உங்கள் மின் கட்டணம் சரியாக உள்ளதா என்பதை சரி பார்க்கவும். ஏக்கரம் கொண்டும் எஸ்எம்எஸ் வந்த எண்ணை தொடர்பு கொள்ள வேண்டாம்.

மேலும், அவர்கள் பணத்தை அனுப்புமாறு கூறி அனுப்பும் இணைய லிங்கக்கை கிளிக் செய்ய வேண்டாம். உடனடியாக 1930 ஐ அழைத்து புகார் அளிக்கவும் என்று மின் வாரியம் எச்சரித்துள்ளது.

இதுபோன்று ஒரு மோசடி மெசேஜ் பலருக்கும் அனுப்பப்பட்டு, அவர்களது வங்கிக் கணக்கிலிருந்து பணம் மோசடி செய்யப்படுகிறது. 

இதுபோன்ற குறுஞ்செய்தி வந்தால், http://cybercrime.gov.in என்ற இணையதளத்தில் சென்று புகார் அளிக்கலாம். அல்லது @tncybercrimeoff என்ற டிவிட்டர் பக்கத்திலும் புகார்அளிக்கலாம் என்றும் மின் வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TNEB warn to people for some scam issue


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->