தஞ்சாவூர் மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை - காரணம் என்ன? - Seithipunal
Seithipunal


தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள, திருவையாறில் ஸ்ரீ சத்குரு தியாகராஜ சுவாமிகளின் 177-வது ஆராதனை விழா கடந்த 26-ம் தேதி தொடங்கியது. இந்த விழாவுக்கான பந்தகால் நடும் நிகழ்வு கடந்த டிசம்பர் மாதம் 14-ம் தேதி நடைபெற்றது. 

அன்று முதல் ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளுக்கு சிறப்பு வழிபாடு மேற்கொள்ளப்பட்டு, ஆஸ்ரம வளாகத்தில் உள்ள பந்தல் காலுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நாளை தஞ்சாவூர் மாவட்டத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவையாறு ஸ்ரீ தியாகராஜர் ஆராதனை விழா இவ்வாண்டு 26.012024 முதல் 30.012024 வரை கொண்டாடப்படுவதை முன்னிட்டு நாளை ஒரு நாள் மட்டும் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் , கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவித்து ஆணை வழங்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த உள்ளூர் விடுமுறை நாளுக்கு பதிலாக 2024-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 10-ம் தேதி ( 10.02.2024 ) சனிக்கிழமை தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும், பணி நாளாக இருக்கும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tomarrow local holiday in thajavur district


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->