தேர்தல் நேரத்தில்.. வெளியான வீடியோ.. தமிழக அரசியலை அதிரவிட்ட ஓவைசி.!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் மக்களவை பொது தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது. இதனால் அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களின் இறுதி கட்ட பிரச்சாரத்தில் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றனர். 

தமிழ்நாட்டில் மும்மனை போட்டியிடுவதால் தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது. அனைத்து அரசியல் கட்சிகளும் வாக்கு சேகரிப்பில் தீயாக ஈடுபட்டு வருகின்றனர். 

இந்த நிலையில் அதிமுக தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக அனைத்து இந்திய மஸ்ஜிதே இத்திஹாதுல் முஸ்லிம் கட்சியின் தலைவரும் மக்களவை உறுப்பினருமான அசதுத்தின் ஓவைசி அறிவித்திருந்தார். 

இந்த அறிவிப்பை உறுதிப்படுத்தும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள ஓவைசி அதில் "இந்த வீடியோ மூலம் தமிழக மக்களுக்கு கூறிக் கொள்வது என்னவென்றால் அதிமுக தலைமையிலான கூட்டணியில் எனது தலைமையிலான aimim இடம்பெற்றுள்ளது. 

அதிமுக பொதுச் சயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை எனது கட்சியின் தமிழக மாநில தலைவர் வக்கீல் அஹ்மத் நேரில் சென்று ஆதரவு தெரிவித்துள்ளார். பாஜகவுடன் இந்த தேர்தலில் கூட்டணி இல்லை மற்றும் எதிர்வரும் தேர்தல்களிலும் கூட்டணி இல்லை என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். 

அதன் காரணமாக அதிமுக தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு அளிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் நமது கட்சியைச் சேர்ந்த அனைவரும் அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டும். இந்த கூட்டணியானது எதிர்வரும் 2026 சட்டமன்ற தேர்தலிலும் தொடரும். 

நான் தமிழகம் வந்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை சந்திக்க திட்டமிட்டு இருந்தேன். தேர்தல் பணியின் காரணமாக அவரை நேரில் சந்திக்க முடியவில்லை. நமது கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் அதிமுகவுக்காக பிரச்சாரம் செய்கின்றனர். இந்தியாவில் பாசிசத்தை ஒழிக்க அனைவரும் அதிமுக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும்" என ஓவைசி பேசி உள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Asaduddin Owaisi support to AIADMK in loksabha election


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->