வரலாற்று சரிவில் இருந்து மீண்டது இந்திய ரூபாயின் மதிப்பு.!
indian rupee value us dollar
நேற்று வா்த்தகத்தில் அந்நியச் செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 12 காசு ஏற்றம் பெற்றது. இதனையடுத்து வரலாற்று சரிவிலிருந்து இந்திய ரூபாய் மீண்டுள்ளது.
சா்வதேச சந்தையில் டாலருக்கான தேவை குறைந்து உள்ளது. மேலும், கச்சா எண்ணெய் விலையில் காணப்பட்ட சரிவு உள்ளிட்ட காரணங்களால் இந்திய ரூபாய் மதிப்பு மீண்டும் எழுச்சி காண்பதற்கு சாதகமாக அமைந்துள்ளது.
வங்கிளுக்கு இடையிலான செலாவணி சந்தையில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடக்கத்தில் ரூ 78.06 இருந்தது.
வா்த்தகத்தின் மிக குறுகிய எல்லைக்குள் நடைபெற்றது. இறுதியில் ரூபாய் மதிப்பு 12 காசு உயா்ந்து 78.10 ஆக நிலைத்தது.
மேலும் சில வர்த்தக செய்திகள் :
சா்வதேச சந்தையில் நடைபெற்ற முன்பேர வா்த்தகத்தில் பிரெண்ட் கச்சா எண்ணெய் பீப்பாய் 118.21 டாலருக்கு நேற்று வா்த்தகம் செய்யப்பட்டது.
கடந்த புதன்கிழமையன்று நடைபெற்ற வா்த்தகத்தில் நிகர அடிப்படையில் ரூ.3,531.15 கோடிக்கு பங்குகளை விற்று முதலீடுகளை வாபஸ் பெற்றது.
English Summary
indian rupee value us dollar