சர்ச்சையை கிளப்பிய நடிகை கஸ்தூரியின் பேச்சு - பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு..!
case file on actor kasthoori
நடிகை கஸ்தூரி சென்னையில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றில் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், 300 வருடங்களுக்கு முன்பு ஒரு ராஜாவுக்கு, அந்தப்புர மகளிருக்கு சேவை செய்ய வந்தவர்களை, தெலுங்கு பேசியவர்களை எல்லாம் தமிழர்கள் இனம் என்று சொல்லும்போது, எப்போதோ வந்த பிராமணர்களை தமிழர்கள் இல்லை என்று சொல்வதற்கு இங்கு யார் இருக்கிறார்கள்? அதனால் தான் இங்கு தமிழர்கள் முன்னேற்ற கழகம் என்று வைக்க முடியவில்லை'', என்று பேசியுள்ளார்.
நடிகை கஸ்தூரியின் இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. அதுமட்டுமல்லாமல் அவரின் பேச்சுக்கு கண்டனங்களும் வலுத்தன. இதையடுத்து தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து நடிகை கஸ்தூரி இன்று அறிக்கை வெளியிட்டார்.
அதில், தெலுங்கு மக்களை புண்படுத்துவது எனது நோக்கம் இல்லை, கவனக்குறைவாக வந்த வார்த்தைகள் யாரையும் காயப்படுத்தியிருந்தால் வருந்துகிறேன். தெலுங்கு மக்கள் குறித்து நான் பேசிய வார்த்தைகள் அனைத்தையும் திரும்பப் பெறுகிறேன் என்று தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், நடிகை கஸ்தூரி மீது நான்கு பிரிவுகளின் கீழ் எழும்பூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
English Summary
case file on actor kasthoori