எம்ஜி மோட்டார்ஸ் - எம்ஜி குளோஸ்டர் காரின் அறிமுகம்.!  - Seithipunal
Seithipunal


எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனம் மேம்பட்ட எம்ஜி குளோஸ்டர் காரை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

விலை விபரங்கள்:

2022 எம்ஜி குளோஸ்டர் சூப்பர் 4x2 - ரூ. 31 லட்சத்து 99 ஆயிரம். 
2022 எம்ஜி குளோஸ்டர் ஷார்ப் 4x2 - ரூ. 36 லட்சத்து 87 ஆயிரம் 
2022 எம்ஜி குளோஸ்டர் சேவி 7S 4x2 - ரூ. 38 லட்சத்து 44 ஆயிரம், சேவி 6S 4x2 - ரூ. 38 லட்சத்து 44 ஆயிரம், சேவி 7S 4x4 - ரூ. 40 லட்சத்து 77 ஆயிரம் 2022 

எம்ஜி குளோஸ்டர் சேவி 6S 4x4 - ரூ. 40 லட்சத்து 77 ஆயிரம் என அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதன் சிறப்பு அம்சங்கள்:

• புதிய மாடலில் சிறிதளவு டிசைன் மற்றும் மேம்பட்ட கனெக்டட் கார் சூட் வழங்கப்பட்டுள்ளது. 

• வெளிப்புறம் புதிய 19 இன்ச் டூயல் டோன் அலாய் வீல்கள் டீப் கோல்டன் நிறத்தில் வழங்கப்பட்டுள்ளது. 

• புதிய 2022 எம்ஜி குளோஸ்டர் மாடல் அகேட் ரெட், மெட்டல் பிளாக், வார்ம் வைட் மற்றும் மெட்டல் ஆஷ் போன்ற நிறங்களில் கிடைக்கிறது. 

• புதிய மாடலில் எல்இடி ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள் மற்றும் இண்டகிரேட் செய்யப்பட்ட எல்இடி டிஆர்எல்கள் வழங்கப்பட்டுள்ளது. 

• மேலும், மூன்று ஸ்லாட் கிரில், க்ரோம் சரவுண்ட், காண்டிராஸ்ட் நிற ஸ்கிட் பிளேட்கள் மற்றும் பாக் லைட்கள் வழங்கப்பட்டுள்ளது.

• இத்துடன், சைடு ஸ்டெப்கள், க்ரோம் டோர் ஹேண்டில்கள், எல்இடி டெயில் லைட்கள் மற்றும் குவாட் டிப் எக்சாஸ்ட்கள் வழங்கப்பட்டுள்ளன.

• காரின் உள்புறம் 75-க்கும் மேற்பட்ட கனெக்டெட் கார் அம்சங்கள் மற்றும் மியூசிக் சிஸ்டத்திற்கு ரிமோட் கண்ட்ரோல் வழங்கப்பட்டுள்ளது.

• ஆம்பியண்ட் லைட்டிங், ஹிங்லிஷ் வாய்ஸ் கமாண்ட்கள் மற்றும் ஆண்ட்ராய்டு வாட்ச் செயலி வழங்கப்பட்டுள்ளது. 

• டோர் ஓபன் வார்னிங், ரியர் கிராஸ் டிராபிக் அலர்ட் மற்றும் லேன் சேன்ஜிங் அசிஸ்ட் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. 

• இந்த மாடலில் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. 

• இந்த என்ஜின் இருவித டியூனிங்கில் கிடைக்கிறது. இத்துடன் 8 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் AT மற்றும் ஆல் வீல் டிரைவ் வசதி வழங்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MG Motors Introducing the MG Gloster Car


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->