தீபாவளிக்கு படத்துக்கு போறிங்களா?...திரைக்கு வரும் புதிய படங்களின் பட்டியல் இதோ! - Seithipunal
Seithipunal


தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட முக்கிய பண்டிகை காலக்கட்டங்களில் முன்னணி நடிகர்களின் திரைப் படங்கள் திரையரங்குகளில் வெளியாகும் போது, ரசிகர்கள் உற்சாகமாக பட்டாசுகள் வெடித்தும், கட் அவட்களுக்கு பால் அபிஷேகம் மற்றும் தாரை தப்பட்டையுடன் நடனமாடி மகிழ்வர்.

இந்த நிலையில், இந்த ஆண்டு தீபாவளிக்கு திரைக்கு வரும் படங்களின் பட்டியலை தற்போது காணலாம்.

>>இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடித்துள்ள 'அமரன்'. திரைப்படத்தில்  சிவகார்த்திகேயன் 'முகுந்தன்' என்ற கதாபாத்திரத்தில் ராணுவ வீரராக நடித்துள்ளார். இந்த படம் வரும் 31-ம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகிறது.

>>அடுத்தாக இயக்குனர் எம். ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி, பிரியங்கா மோகன் நடித்துள்ள 'பிரதர்'. படம் அக்கா - தம்பி உறவை அடிப்படையாக கொண்டு குடும்ப பொழுதுபோக்கு படமாக உருவாகியுள்ளது. இந்த படம் வரும் 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

>>மேலும், இயக்குனர் நெல்சன் தயாரிப்பில் அறிமுக இயக்குனரான சிவபாலன் முத்துகுமார் இயக்கத்தில் கவின் கதாநாயகனாக நடித்துள்ள  'பிளடி பெக்கர்' திரைப்படம் வரும் 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

>>தொடர்ந்து, வெங்கி அட்லுரி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி  லக்கி பாஸ்கர், ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில் நடிகை பிரியா பவானி சங்கர் நடித்துள்ள  ஜீப்ரா, இயக்குனர் டாக்டர் சூரி இயக்கத்தில் கன்னட நடிகர் ஸ்ரீமுரளி  நடித்துள்ள பஹீரா மற்றும் கா உள்ளிட்ட திரைப்படங்கள் தீபாவளிக்கு திரைக்கு வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Going to a movie for diwali here a list of new movies hitting the screens


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->