எங்களுக்கு போட்டியே 15 நொடி ரீல்ஸ்தான்! போறபோக்க பார்த்த ரீல்ஸ் நடிகைகள் கூட போட்டிபோடனும் - நடிகை தமன்னா! - Seithipunal
Seithipunal


எங்களுக்கு போட்டியாக சமூக வலைதளங்களில் 15 நொடி ரீல்ஸ்கள் வந்துள்ளது என நடிகை தமன்னா தெரிவித்துள்ளார்.

நடிகை தமன்னா சமீப காலமாக வித்தியாசமான கதை அம்சம் உள்ள படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்தநிலையில், சினிமா அனுபவங்கள் குறித்து தமன்னா தெரிவித்ததாவது, சிறு வயதிலேயே நடிகையாக வேண்டும் என்ற கனவு எனக்கு இருந்தது.

அதை நிறைவேற்றும் விதமாக எனது முடிவுகளும் இருந்தன. அதுதான் என்னை இந்த நிலைமைக்கு கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறது. சினிமாவில் அடி எடுத்து வைத்ததும் எத்தனையோ சவால்களை எதிர்கொள்ள வேண்டி வந்தது. நான் நல்ல நடிகையாக நேசிக்க வேண்டும் என்பதில் உறுதியாகவே இருந்தேன். அதற்காக 100 சதவீதம் உழைத்தேன் இப்போது சாதித்து விட்டேன் என்ற மகிழ்ச்சி எனக்கு கிடைத்துள்ளது.

ஒரு காலத்தில் தியேட்டர்களில் மட்டும் படம் பார்த்தார்கள் இப்போது காலம் மாறிவிட்டது ஓடிடி யும் நிறைய படங்கள் ரசிகர்கள் வரவேற்பு கிடைகிறது. அது மட்டும் இன்றி சமூக வலைத்தளங்களில் 15 நொடி ரீல்ஸ் ரசித்து பார்த்த பொழுதை  கழிக்கிறார்கள்.

ரீல்ஸ் பார்க்கும் ரசிகர்களை கவர்வது நடிகர் நடிகைகளுக்கு பெரிய சவாலாக இருக்கிறது. அவர்களுக்கு பிடித்த மாதிரியான கதைகள் நடிக்க வேண்டி உள்ளது. ரீல்ஸ்கள் நடிகைகள்தான் எங்களுக்கு பெரிய போட்டியாக மாறி இருக்கிறது என்று கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Our competition is 15 second reels Actress Tamannaah


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->