காஜல் அகர்வாலுக்கு குவியும் பட வாய்ப்பு.. மேலும் ஒரு படப்பிடிப்பு தொடக்கம்!
Kajal Aggarwals film offers One more shooting start
இந்தியன் 3, சிக்கந்தர், கண்ணப்பா உட்பட பல பெரிய படங்களில் காஜல் அகர்வால் நடித்து வரும் நிலையில்.மேலும் ஒரு பாலிவுட் படத்தின் படப்பிடிப்பை காஜல் துவங்கி இருக்கிறார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான நடிகை காஜல் அகர்வால் முன்னணி நடிகர்கள் பலருடன் சேர்ந்து நடித்துவிட்டார். தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் போன்ற வேற்று மொழி படங்களிலும் நடித்து தூள் கிளப்பி வருகிறார் காஜல்.
சமீபத்தில் தெலுங்கு திரைப்படமான சத்யபாமாவில் கடைசியாக நடித்திருந்த காஜல் அகர்வால், தற்போது இந்தியன் 3, சிக்கந்தர், கண்ணப்பா உட்பட பல பெரிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், மேலும் ஒரு பாலிவுட் படத்தின் படப்பிடிப்பை காஜல் துவங்கி இருக்கிறார் என செய்திகள் வெளியாகிஉள்ளது.
'தி இந்தியா ஸ்டோரி' படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கி உள்ள நிலையில் இப்படத்தினை சேத்தன் டிகே இயக்குகிறார். மேலும் இந்தப்படத்தில் கங்கனா ரனாவத்தின் எமர்ஜென்சி படத்தில் அடல் பிஹாரி வாஜ்பாயாக நடித்திருப்பவரும், அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 படத்திற்கு டப்பிங் பேசியவருமான ஷ்ரேயாஸ் தல்படே இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பூச்சிக்கொல்லி ஊழலை மையமாக வைத்து உருவாகும் இப்படத்திற்கு சாகர் பி. ஷிண்டே கதை எழுதியுள்ள இப்படம் வரும் ஆகஸ்ட் 15 -ம் தேதி வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்தியன் 3, சிக்கந்தர், கண்ணப்பா உட்பட பல பெரிய படங்களில் காஜல் அகர்வால் நடித்து வரும் நிலையில் இந்த படம் பற்றிய கூடுதல் விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
Kajal Aggarwals film offers One more shooting start