கேகே உடலுக்கு துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதை.. முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவிப்பு.!!
Respect for kk body gunshots
பிரபல பின்னணி பாடகர் கிருஷ்ணகுமார் குன்னாத். அனைவராலும் கே கே என்று அழைக்கப்படுகிறார். டெல்லியை பூர்வீகமாக கொண்ட இவர். ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல்வேறு மொழி திரைப்படங்களில் பல பாடல்களைப் பாடியுள்ளார்.
தமிழில் இவர் காக்க காக்க படத்தில் உயிரின் உயிரே, அந்நியன் படத்தில் அண்டங்காக்கா கொண்டக்காரி, மன்மதன் படத்தில் காதல் வளர்த்தேன் உள்ளிட்ட பல்வேறு பாடல்களைப் பாடியுள்ளார். இவர் பாடிய பாடல்கள் பல பாடல்கள் தமிழ் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. தமிழில் இவர் இறுதியாக லெஜண்ட் திரைப் படத்தில் இரண்டு பாடல்களை பாடியுள்ளார். இவருக்கு பல்வேறு மாநிலங்களில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
இந்நிலையில், கொல்கத்தாவில் குருதாஸ் நஸ்ரூல் மன்சா கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாடல் பாடும் போது, அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் உடனடியாக கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். அவருடைய திடீர் மறைவு பலருக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. தற்போது அவரது மறைவிற்கு அரசியல் பிரபலங்கள், சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் என பல்வேறு தரப்பிலிருந்து இரங்கல் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
இந்நிலையில், கொல்கத்தாவில் உயிரிழந்த பிரபல பின்னணி பாடகர் கேகே உடலுக்கு துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதை வழங்கப்படும் என மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். கொல்கத்தா விமான நிலையத்தில் துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதை வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
English Summary
Respect for kk body gunshots