ஒரு டிக்கெட் ரூ.800! 'கோட்' திரைப்படத்தின் சிறப்பு காட்சிகளை ரத்து செய்த 80% திரையரங்குகள்!  - Seithipunal
Seithipunal


இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில், நடிகர் விஜயின் நடிப்பில் உருவாகியுள்ள ''கோட்'' திரைப்படம் நாளை மறுநாள் திரையரங்குகளில் வெளியாக உள்ளது..

தமிழ்நாட்டில் 'கோட்' திரைப்படத்தின் சிறப்பு காட்சிகளை 80 சதவீத திரையரங்குகள் ரத்து செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன . 

சிறப்பு காட்சி டிக்கெட் ஒன்றுக்கு ரூ.700 முதல் ரூ.800 வரை விநியோகஸ்தர்கள் கேட்பதால் ரத்து செய்யப்பட்டுள்ளதாக வெளியான அந்த தகவல் தெரிவிக்கிறது.

விநியோகஸ்தர்களின் நெருக்கடியால் சிறப்பு காட்சிகளை ரத்து செய்த திரையரங்கு உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக காலை 9 மணி சிறப்பு காட்சியை எதிர்பார்த்து காத்திருந்த விஜய் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். 

இதற்கிடையே, கோட் திரைப்படம் திரைக்கு வரும் போது, மக்களுக்கு இடையூறு இல்லாமல் கொண்டாட வேண்டும் என்று, ரசிகர்களுக்கு நடிகர் விஜய் வாய்மொழியாக உத்தரவு பிறப்பித்துள்ளதாக தெரிகிறது. 

அரசியல் கட்சி தொடங்கப்பட்டுள்ளதால் ரசிகர்களும், தொண்டர்களும் கூடுதல் பொறுப்புடன் இருக்க வேண்டும் என்று, நடிகர் விஜய் வாய்மொழியாக உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The GOAT From Sep 5th Vijay TN Theatres Cinema Update 


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->