மத்திய பல்கலைக்கழக நுழைவு தேர்வு முடிவுகள் வெளியீடு! - Seithipunal
Seithipunal


புதிய கல்விக் கொள்கையின் படி நடத்தப்படும் பொது நுழைத்தேர்வு!

புதிய கல்விக் கொள்கையின்படி மத்திய பல்கலை சேர்வதற்கு க்யூட் எனப்படும் நுழைவுத் தேர்வு பல்கலைக்களுக்காக மட்டும் நடத்தப்பட்டு வருகிறது. மத்திய பல்கலைக்கழகங்களில் கலை, அறிவியல் மற்றும் பிசினஸ் மேனேஜ்மென்ட் துறையில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப் படிப்புகளில் சேர்வதற்கு மாணவர்கள் இந்த தேர்வினை எழுதி தேர்ச்சி பெற வேண்டும்.

இந்த தேர்வில் நாடு முழுவதும் 14,90,283 மாணவர்கள் 90 பல்கலைக்கழகங்களில் கலை சார்ந்த பட்டப்படிப்பிற்கு சேர்வதற்கு இந்த தேர்வினை எழுத விண்ணப்பித்தனர். இதில் மொத்தமாக 9,62,201 மாணவர்கள் கலந்து கொண்டதாக தேசிய தேர்வு மையத்தின் புள்ளிவிவரம் தெரிவிக்கின்றது. இந்தியா முழுவதும் 50 தேர்வு மையங்களில் மத்திய பல்கலைக்கழகம் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப் படிப்பில் சேர்வதற்கான தேர்வுகள் 6 கட்டங்களாக நடந்தன. 

பிராந்தி மொழிகளான தமிழ் ஆங்கிலம் உட்பட 13 இந்திய மொழிகளில் தேர்வு நடைபெற்றது. தேசிய தேர்வு முகமையால் அறிவிக்கப்பட்ட படி இன்று மாலை கியூட் முதுகலை படிப்பிற்கான தேர்வு முடிவுகள் வெளியானது. தேர்வு முடிவுகளை https://cuet.nta.nic.in என்ற இணையதளத்தில் தேர்வின் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. 

 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Central University Entrance Exam Results Released


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->