மக்களை மிரள வைக்கும் கொரோனா - மஹாராஷ்டிராவில் 28 பேருக்கு தொற்று உறுதி.! - Seithipunal
Seithipunal


கடந்த சில மாதங்களாக நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அந்த வகையில், மகாராஷ்டிராவில் நேற்று ஒரே நாளில் மட்டும் 28 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. இதனால், அம்மாநிலத்தில் கொரோனா மூலம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 153 ஆக அதிகரித்துள்ளது. 

நேற்று பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்ட 28 பேரில் ஒருவருக்கு கூட ஜே.என். 1 வகை பாதிப்பு ஏற்படவில்லை. புதிதாக கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கையுடன், அம்மாநிலத்தில் இதுவரைக்கும் கொரோனா மூலம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 81 லட்சத்து 72 ஆயிரத்து 163 ஆக அதிகரித்து இருக்கிறது என்று மாநில சுகாதார துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "மாநிலத்தில் இதுவரை 153 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் 142 பேர் வீட்டில் இருந்தபடி தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை எடுத்துக் கொள்கின்றனர். 

11 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் இருவர் மட்டும் தீவிர சிகிச்சை பிரிவில் ஐ.சி.யு.-வில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், மற்றவர்கள் மருத்துவ மேற்பார்வையில் உள்ளனர்," என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

28 peoples affected corona in maharastra


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->