பீகார் | பள்ளி குழந்தைகளை ஏற்றி சென்ற படகு கவிழ்ந்து விபத்து! குழந்தைகளின் நிலை? - Seithipunal
Seithipunal


பீகார், முசாபர்புர் மாவட்டத்தில் உள்ள பாக்மதி நதி வழியாக மதுபுர் பாத்தி காட் இடையே படகு ஒன்று 30 குழந்தைகளை பள்ளிக்கு ஏற்றி சென்று கொண்டிருந்தது. 

அப்போது திடீரென படகு ஆற்றில் கவிழ்ந்ததால் குழந்தைகள் அனைவரும் தண்ணீரில் தத்தளித்தனர். உடனடியாக இதுகுறித்து மீட்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

தகவல் அறிந்த மீட்பு குழு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்த 20 குழந்தைகளை மீட்டனர். 

இருப்பினும் 10 குழந்தைகளின் நிலை குறித்து தெரியவில்லை. மீட்டு படையினர் அவர்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 

இது குறித்து தகவல் அறிந்த பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார், மீட்டு பணியை தீவிரப்படுத்தவும்,  இந்த விவகாரம் குறித்து அவசரமாக கவனிக்கவும் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தியுள்ளார். 

மேலும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அனைத்து விதமான நல உதவிகளையும் அரசு செய்யும் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bihar boat carrying school children overturned accident


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->