சிவகார்த்திகேயன் உயர்வுக்கு விஜய் டிவி காரணமல்ல?...ரகசியத்தை போட்டுடைத்த ஆர்.ஜே.பாலாஜி! - Seithipunal
Seithipunal


இயக்குனர் பா. ரஞ்சித்தின் உதவி இயக்குனர் சித்தார்த் விஸ்வநாத் இயக்கத்தில் நடிகர் ஆர்.ஜே  பாலாஜி நடித்து முடித்துள்ள சொர்க்கவாசல் படத்தின் டிரெய்லர் வெளியாகி பொதுமக்கள் மற்றும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

மத்திய சிறைச்சாலையை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படத்தில், நடிகர்கள் செல்வராகவன், கருணாஸ், பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட பலர்  நடித்துள்ளனர். இந்த நிலையில், இப்படம் வரும் 29-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், படத்தின் ப்ரொமோசன் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

இந்த நிலையில், நிகழ்ச்சி ஒன்றில்  கலந்து கொண்ட ஆர்.ஜே  பாலாஜி, விஜய் டிவியில் திட்டம் போட்டு ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினால் சிவகார்த்திகேயன் மாதிரி வந்துவிடலாம் என்று நினைக்கின்றனர் என்றும், ஆனால் அப்படியெல்லாம் யாராலும் வரமுடியாது என்று கூறினார்.

மேலும், சிவகார்த்திகேயன் விஜய் டிவியில் மிக சிறப்பான வேலை மற்றும் திறமையை வெளிப்படுத்தியதால்  மக்கள் அனைவருக்கும் பிடித்தது  என்றும், இதனால் மட்டுமே விஜய் டிவியில் இருந்து சிவகார்த்திகேயன் இந்த நிலைமைக்கு வந்துள்ளார் என்று கூறியுள்ள அவர், விஜய் டிவிக்குள் சென்றாலே சிவகார்த்திகேயனை போல் ஆகிவிட முடியாது என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Vijay tv is not the reason for sivakarthikeyan promotion rj balaji revealed the secret


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->