உலகின் முதல் மூக்கு வழி கொரோனா தடுப்பு மருந்துக்கு மத்திய அரசு அனுமதி!
central govt approved the worlds first nasal anti coronavirus drug
கோவேக்சின் தடுப்பூசியை உருவாக்கிய பாரத் பயோடெக் நிறுவனம் தற்பொழுது மூக்கு வழியாக செலுத்தும் இன்கோவாக் கொரோனா தடுப்பு மருந்தை வாஷிங்டன் பல்கலைக்கழகத்துடன் இணைந்து உருவாக்கியுள்ளது. குறைந்த செலவில் தயாரிக்கப்பட்ட இந்த தடுப்பு மருந்து நடுத்தர நாடுகளுக்கு உதவியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து கட்ட பரிசோதனையிலும் தேர்ச்சி அடைந்துள்ள நிலையில் தற்போது தடுப்பு மருந்தை அவசரகால அடிப்படையில் பூஸ்டர் டோஸ்களுக்காக பயன்படுத்த மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. உலகின் முதல் மூக்கு வழி செலுத்தும் தடுப்பு மருந்துக்கு அவசரகால பயன்பாட்டிற்காக ஒப்புதல் பெறும் முதல் நிறுவனம் என்ற பெருமையை பாரத் பயோடெக் நிறுவனத்திற்கு கிடைத்துள்ளது.
மூக்கு வழியாக செலுத்தவும் இந்த மருந்து 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு வழங்கலாம் என பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பேசிய அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கிருஷ்ணா "மூக்கு வழியாக செலுத்தப்படும் தடுப்பு மருந்தின் விலை விரைவில் அறிவிக்கப்படும். தற்பொழுது கொரோனா தடுப்பு மருந்துகளுக்கான தேவை குறைந்துள்ளதால் தடுப்பூசி மேம்பாட்டில் கவனம் செலுத்தி வருகிறோம். எதிர்காலத்தில் ஏற்படும் வைரஸ் தாக்குதலை சரியான முறையில் எதிர்கொள்ள பாரத் பயோ டெக் நிறுவனம் தயாராக உள்ளது" என தெரிவித்துள்ளார்.
English Summary
central govt approved the worlds first nasal anti coronavirus drug