ஒரே பதவி; ஒரே ஓய்வு ஊதியம் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்..!!
Central Govt approves single position single retirement Pay scheme
இந்திய ராணுவத்தில் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களுக்கு ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் திட்டத்தை மத்திய அரசு கடந்த 2015ல் அறிவித்தது. அந்தத் திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்றி அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதனை ஆண்டுதோறும் மாற்றியமைக்க வேண்டும் என முன்னாள் வீரர்கள் இயக்கம் சார்பில் மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதனை அடுத்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் கடந்த 2019 ஆம் ஆண்டு மத்திய அரசு திருத்தம் மேற்கொள்ள உறுதி அளித்தது. இதனைத் தொடர்ந்து மாற்றி அமைக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் இந்தியா முழுவதும் உள்ள 25 லட்சத்திற்கும் மேற்பட்ட முன்னாள் ராணுவ வீரர் பயனடைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Central Govt approves single position single retirement Pay scheme