மீண்டும் ஆட்டத்தை ஆரம்பிக்கும் கொரோனா: கடந்த 24 மணி நேரத்தில் 5 பேர் பலி! - Seithipunal
Seithipunal


நாட்டில் 256 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 4049 ஆக அதிகரித்துள்ளதாகவும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

கேரளா மற்றும் மகாராஷ்டிரா மாநிலத்தில் 4 பேர், ஜம்மு காஷ்மீரில் ஒருவர் என கடந்த 24 மணி நேரத்தில் 5 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.  

கடந்த டிசம்பர் 5ஆம் தேதி வரை தொற்று எண்ணிக்கை இரட்டை இலக்கத்தில் இருந்து வந்த நிலையில் தற்போது வானிலை மாற்றம் காரணமாக அதிகரித்து வருகிறது. 

கடந்த டிசம்பர் 31ஆம் தேதி மட்டும் தொற்று 841 பேருக்கு உறுதி செய்யப்பட்டது. இதில் பெரும்பாலானோர் தங்களது வீடுகளில் தனித்து இருந்து சிகிச்சை பெற்று குணமடைந்தனர். 

புதிய வகை ஜேஎன்1 தொற்று அதிக அளவில் பரவவில்லை எனவும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெரும் அளவிற்கு தீவிரமடைவதில்லை எனவும் மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

இதுவரை இந்தியா 3 கொரோனா அலைகளை கடந்துள்ளது. தனது 2020 ஆம் ஆண்டு கொரோனா தொற்று ஏற்பட்டதில் இருந்து 4.5 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் 98.81% தொற்றில் இருந்து மீண்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Corona 5 people died last 24 hours


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->