சட்டம் போட்டு தடுக்க முடியுமா? தலைநகர் டெல்லியை திக்குமுக்காடவைத்த பட்டாசுகள் - தெறிக்கவிட்ட இந்துக்கள்! - Seithipunal
Seithipunal


டெல்லி நீதிமன்றம் பட்டாசு வெடிக்க தடை விதித்ததனால், 2023ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி வரை அனைத்து வகையான பட்டாசுகளின் விற்பனை, உற்பத்தி மற்றும் பயன்பாடு ஆகியவற்றுக்கு டெல்லி அரசு முழுத் தடை விதித்தது. 

இதனை எதிர்த்து உச்சநீதிமன்றதில் தொடரப்பட்ட வழக்கில், தலைநகர் புதுடெல்லியை உள்ளடக்கிய தேசிய தலைநகர் பிராந்தியத்தில் பட்டாசு வெடிப்பதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க மாட்டோம். எங்கள் உத்தரவு மிகவும் தெளிவாக உள்ளது" என்று உத்தரவிட்டது.

தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசு வெடிக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தாலும், பலர் பட்டாசு வெடித்ததால், காற்றின் மாசுபாடு அதிகரித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சிறைத்தண்டனை என்று எச்சரித்த போதிலும் இந்துக்கள் தெருவில் இறங்கி பட்டாசுகள் வெடித்தனர். மேலும், உத்தரப் பிரதேசம், ஹரியாணா, பஞ்சாப், ராஜஸ்தான், உள்ளிட்ட மாநிலங்களில் பயிர்க்கழிவுகள் எரிக்கப்பட்டதால், டெல்லியில் காற்று மாசு அதிகரித்துள்ளது. 

இதன் காரணமாக, தலைநகர் தில்லியில் காற்றின் தரம் மிகவும் மோசமான நிலையை எட்டியுள்ளது. முக்கிய இடங்களில் தண்ணீர் பீய்ச்சியடிக்கும் பணியை டெல்லி மாநகராட்சி தீவிரப்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

delhi diwali 2022 update


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->