அட கடவுளே..! நோ மினிமம் பேலன்ஸ் ! ரூ.2331 கோடி அபராதம் வசூல்!
far banks have allowed bank accounts without minimum balance of Rs 2331 Collection of flag fine
மினிமம் பேலன்ஸ் இல்லாத வங்கிக் கணக்கில் இதுவரை வங்கிகள் ரூ. 2331 கொடி அபராதம் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தனிநபர் வங்கி கணக்கில் மினிமம் பேலன்ஸ் என்று சொல்லக்கூடிய குறைந்தபட்ச வைப்புத் தொகை இருக்க வேண்டும். தனிநபர் வங்கி கணக்குகளில் மாதாந்திர குறைந்தபட்ச வைப்புத் தொகை இல்லாத வங்கி கணக்குகளில் வங்கிகள் அபராதம் வசூலிக்கிறது.
இந்த நிலையில் 2024 ஆம் ஆண்டு தனிநபர் வங்கி கணக்குகளில் மாதாந்திர குறைந்தபட்ச வைப்புத் தொகை இல்லாததால் வசூலிக்கப்பட்ட அபராதம் ரூ. 2331 கோடி வசூலிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டை விட 25 சதவீதம் அதிகம் என்று தகவல் வெளியாகி உள்ளது.
இது குறித்து மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சௌத்திரி பாராளுமன்றத்தில் தெரிவித்ததாவது, மாதாந்திர குறைந்தபட்ச வாய்ப்பு தொகை இல்லாத வங்கி கணக்குகளில் இருந்து ரூ. 2331 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இது கடந்த நிதியாண்டில் வசூலிக்கப்பட்ட அபராதத்தை விட 25 சதவீதம் அதிகமாகும்.
அதிகபட்சமாக பஞ்சாப் நேஷனல் வங்கியில் பயனர்களிடமிருந்து ரூ. 633 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. பேங்க் ஆப் பரோடா வங்கி பயனார்களிடம் இருந்து மொத்தமாக ரூ. 386 கோடியும் வங்கி கணக்கில் வசூலிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
முறையான மினிமம் பேலன்ஸ் இல்லாத வங்கி கணக்குகளில் அடுத்த முறை பரிவர்த்தனை மேற்கொள்ளும் போது அதிலிருந்து அபராத தொகை பிடித்தம் செய்யப்படுகிறது. இதனால் நடுத்தர மற்றும் ஏழை எளிய மக்கள் வங்கி சேவையை பயன்படுத்த முடியாத ஏற்பட்டுள்ளதாக பலர் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
English Summary
far banks have allowed bank accounts without minimum balance of Rs 2331 Collection of flag fine