முதல்வர் பங்களா அருகே தீப்பிடித்து எரிந்த கட்டிடம் - அதிர்ச்சியில் மணிப்பூர் மக்கள்.!
fire accident near manipur cm building
மணிப்பூர் மாநிலத்தின் தலைநகர் இம்பாலில் உள்ள உயர் பாதுகாப்பு செயலக வளாகத்தின் அருகே அமைந்துள்ள கட்டிடத்தில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அதாவது, மாநிலத்தின் முதல்வர் என் பிரேன் சிங்கின் அதிகாரபூர்வ பங்களாவில் இருந்து சில நூறு மீட்டர் தொலைவில் இந்த கட்டிடம் அமைந்துள்ளது.
இந்த தீ விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் பலமணிநேரம் போராடி தீயை அணைத்துள்ளனர். இதுவரைக்கும் இந்த சம்பவத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்த தகவல் வெளிவரவில்லை.
இதற்கிடையே தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் வன்முறையின் எதிரொலியா? என்றும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
fire accident near manipur cm building