உத்திர பிரதேசத்தில் நாளை முதல்கட்ட வாக்குப்பதிவு.!
First Phase Election
உத்திர பிரதேச மாநிலத்தில் நாளை முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
உத்திர பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநிலங்களுக்கு 7 கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. முதல்கட்ட வாக்குப்பதிவு நாளை தொடங்குகிறது. அனைத்து தரப்பினரும் பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் உத்திரபிரதேசத்தில் நாளை முதல்கட்ட வக்குப்பதிவு நடைபெற உள்ளது. இங்கு மொத்தம் உள்ள 403 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நாளை முதல் மார்ச் 7ஆம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது.
நாளை 11 மாவட்டங்களில் உள்ள 58 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த 58 தொகுதிகளில் 9 தொகுதிகள் பழங்குடியினர் மற்றும் தாழ்த்தப்பட்டவர்களுக்கான தனித்தொகுதிகள் ஆகும். ஜாட் சமூகத்தினர் அதிக அளவில் வசித்து வரும் இந்த தொகுதிகளில் 623 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். மொத்தம் 2.27 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.
கொரோனா தொற்று பரவலால் அரசியல் கட்சிகள் காணொலி வாயிலாக பிரசாரம் செய்து வந்தனர். நேற்று மாலை 6 மணியுடன் இந்த தொகுதிகளுக்கான பிரசாரம் நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது.