பைபர்ஜாய் புயல் : சூறாவளிக் காற்று அதிகரித்தால் ரெயில்கள் நிறுத்தப்படும் - இந்திய ரயில்வே அறிவிப்பு.!!
indian railway announce trains will stop for increase in wind speed paibarjoi storm
பைபர்ஜாய் புயல் : சூறாவளிக் காற்று அதிகரித்தால் ரெயில்கள் நிறுத்தப்படும் - இந்திய ரயில்வே அறிவிப்பு.!!
தென்கிழக்கு மற்றும் மத்திய அரபிக்கடலில் உருவாகியுள்ள பைபர்ஜாய்' சூறாவளி காரணமாக காற்றின் வேகம் மணிக்கு 50 கி.மீக்கு மேல் இருந்தால் ரயில்களை ஒழுங்குபடுத்த அல்லது நிறுத்துவதற்கான அறிவுறுத்தல்கள் வழங்கப்படும் என்று இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இந்திய ரயில்வே அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், ‘’அதிதீவிர நிலையில் உள்ள 'பைபர்ஜாய்’ புயல் குஜராத்தின் சௌராஷ்டிரா மற்றும் கட்ச் கடற்கரை பகுதிகளில் தீவிரமான தாக்கத்தை ஏற்படுத்தும். புயல் கரையைக் கடக்கும் பகுதி இனிவரும் நாள்களில் தெளிவாக தெரியவரும்.
இந்த புயல் சௌராஷ்டிரா மற்றும் கட்ச் பகுதிகளை பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாவ்நகர், மஹுவா, வெராவல் முதல் போர்பந்தர் பகுதி, ஓகா முதல் ஹாபா வரை மற்றும் காந்திதாம் பகுதி உள்ளிட்டவை பாதிக்கக் கூடும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
அதனால், பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மண்டல ரயில்வே தலைமையகத்தில் பேரிடர் மேலாண்மை அறையை செயல்படுத்துதல் மற்றும் பல்வேறு துறைகளால் இருப்பது நான்கு மணி நேரமும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையே பாவ்நகர், ராஜ்கோட், அகமதாபாத் மற்றும் காந்திதாமில் உள்ள பிரிவு தலைமையகத்தில் அவசரகால கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.காற்றின் வேகத்தை பல இடங்களில் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.
காற்றின் வேகம் மணிக்கு 50 கி.மீ மேல் இருந்தால் ரயில்களை ஒழுங்குபடுத்த அல்லது நிறுத்துவதற்கான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் நிலையங்களில் அனிமோமீட்டர்கள் பொருத்தப்பட்டு, காற்றின் வேகத்தை மணிக்கணக்கில் கணக்கிடப்படுகிறது.
பயணிகள் தங்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் அருகாமையில் உள்ள ரயில் நிலையங்களை தொடர்புக் கொள்ளலாம்’’ என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
indian railway announce trains will stop for increase in wind speed paibarjoi storm