பாம்பு பிடி மன்னன் வாவா சுரேஷின் தற்போதைய உடல்நிலை என்ன? இன்னும் இரண்டு நாள்.., தலைமை மருத்துவர் வெளியிட்ட செய்தி.! - Seithipunal
Seithipunal


கேரள மாநிலத்தில் மக்கள் வசிக்கும் இடங்களில் இருந்து பாம்புகளை மீட்டு பாதுகாப்பான பகுதியில் விடக்கூடிய சமூக ஆர்வலரான வாவா சுரேஷ், நேற்று நல்ல பாம்பு கொத்தியதால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கேரள மாநிலத்தில் தனி ஒரு நபராக மக்கள் வசிக்கக்கூடிய குடியிருப்பு பகுதிகளில், தவறுதலாக வந்த  50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாம்புகளை மீட்டு, வனப்பகுதியில் விடக்கூடிய பணியில் சமூக ஆர்வலர் சுரேஷ் ஈடுபட்டு வந்தார். 

அப்படியாக இரு தினங்களுக்குமுன், கோட்டயம் மாவட்டம், சங்கனச்சேரி அடுத்த குரிச்சி கிராமத்தின் குடியிருப்பு பகுதியில் ஒரு நல்ல பாம்பை பிடிப்பதற்காக வந்த சுரேஷ், அந்த பாம்பை நீண்ட நேரம் கழித்து ஒரு வழியாக பிடித்தார். 

பின்னர் அந்த பாம்பை மக்கள் முன்னிலையில் அவர் எடுத்து வந்திருந்த சாக்கு பையில் போட முயற்சித்த போது, எதிர்பாராத விதமாக சுரேஷின் தொடை பகுதியில் அந்த பாம்பு கொத்தியது.

இதனையடுத்து உடனடியாக அவர் கோட்டயத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரது உடல்நிலை மோசமானதால், தீவிர சிகிச்சை பிரிவில் கடந்த 2 நாட்களாக செயற்கை சுவாசம் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இதற்கிடையே, வாவா சுரேஷூக்கு தேவையான அனைத்து மருத்துவ உதவிகளும் அளிக்கப்படும் என்று கேரளா மாநில சுகாதார துறை மந்திரி வீணா ஜார்ஜ் அறிவித்ததன் பேரில், கோட்டயம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி சூப்பிரண்டு டாக்டர் ஜெயக்குமார் தலைமையில் சிறப்பு மருத்துவ குழுவினர் அவருக்கு சிகிச்சை அளித்தனர். 

நேற்றிரவு நிலவரப்படி அவரின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர் ஜெயக்குமார் தெரிவித்து உள்ளார். மேலும், தற்போது அவர் சுயமாக சுவாசிக்கிறார் என்றும், இரண்டு நாட்களில் அவர் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்படுவார் என்றும் மருத்துவர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kerala vava suresh health report


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->